மணிப்பூரில் பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்
Published : Feb 04, 2021 8:53 AM
மணிப்பூரில் பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்
Feb 04, 2021 8:53 AM
மணிப்பூர் மாநிலம் தௌபால் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
தௌபால் மாவட்டத்தில் நகராட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நான்கு தனிப்படைகள் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த 6 கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் இரண்டு கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன.
இதுகுறித்து காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர்.