​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
’டீசல் போட பணம் கொடு.. பொண்ண தேடுறோம்...’ -மாற்றுத்திறனாளி தாயிடம் அராஜகம் செய்த உ. பி போலீஸ்!

Published : Feb 04, 2021 8:53 AM



’டீசல் போட பணம் கொடு.. பொண்ண தேடுறோம்...’ -மாற்றுத்திறனாளி தாயிடம் அராஜகம் செய்த உ. பி போலீஸ்!

Feb 04, 2021 8:53 AM

உத்தரப்பிரதேசத்தில் காணாமல் போன சிறுமியைத் தேட மாற்றுத்திறனாளி தாயிடம் ’டீசல் போட பணம் தந்தால் தான் தேடுவோம்’ என்று போலீசார் மனசாட்சியின்றி பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் குடியா. இவர் ஒரு மாற்றுத்திறனாளிப் பெண். கடந்த மாதம் இவரது பதின்ம வயது மகள் காணாமல் போய்விட்டார். கடத்தப்பட்டதாகக் கூறப்படும் தனது காணாமல் போன மகளைக் கண்டுபிடித்துத் தர உள்ளூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரைப் பதிவு செய்துகொண்ட உள்ளூர் போலீசார், மாற்றுத்திறனாளி பெண்ணிண் மகளை தேடுவதில் சுணக்கம் காட்டினர்.

மேலும், சிறுமியைக் கண்டுபிடிக்க வேண்டுமானால் போலீஸ் வாகனத்திற்கு டீசல் போட பணம் தர வேண்டும் என்று அந்த மாற்றுத்திறனாளி தாயை வற்புறுத்தியுள்ளனர். அந்த ஏழைத்தாயும் மகளை எப்படியாவது தேடிக் கண்டுபிடித்து தந்தால் போதும் என்று தனது உறவினர்களிடம் கடன் வாங்கி 4 முறை ரூ. 15 ஆயிரம் வரை போலீசாருக்கு கொடுத்துள்ளார். ஆனாலும் தேடுவதில் தொடர்ந்து ஆமை வேகத்தில் செயல்பட்ட போலீசார் காணாமல் போன சிறுமியின் நடத்தையில் தவறு இருப்பதாகக் கூறி இழிவுப்படுத்தியுள்ளனர்.

இதனால், மனமுடைந்து போன குடியா, காணாமல் போன மகளைத் தேட டீசல் போட ரூ.15 ஆயிரம் பணம் பறித்த போலீசார் குறித்து கான்பூர் உயரதிகாரிகளிடமும், பத்திரிக்கையாளர்களிடமும் புகார் அளித்தார். அதனையடுத்து உத்தரபிரதேச போலீசாரின் அலட்சியப்போக்கு வெளிச்சத்திற்கு வந்தது.

தற்போது, ஏழைத்தாயான மாற்றுத்திறனாளி பெண்ணிடம் பணம் பறித்த காவலரை சஸ்பெண்ட் செய்து கான்பூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், உயரதிகாரிகள் காணாமல் போன சிறுமியைக் கண்டுபிடிக்க போலீசார் நான்கு தனிக் குழுக்களை அமைத்து தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.