​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியாவில் 4இல் ஒருவருக்கு கொரோனா - ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்?

Published : Feb 04, 2021 8:23 AM

இந்தியாவில் 4இல் ஒருவருக்கு கொரோனா - ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்?

Feb 04, 2021 8:23 AM

இந்தியாவில் நான்கில் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் இதுவரை 1 கோடியே 07 லட்சத்து 77 ஆயிரத்து 284 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதில், 1 கோடியே 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், இதுவரை இந்தியாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 கோடி வரை இருக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் அது குறித்து  அதிகாரப்பூர்வமாக நாளை அந்த கவுன்சில் அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி  உள்ளது.