​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் கனமழையால் ஏற்பட்ட பயிர் சேத பாதிப்புகள்: மத்தியக்குழுவினர் இன்று ஆய்வு

Published : Feb 04, 2021 8:03 AM

தமிழகத்தில் கனமழையால் ஏற்பட்ட பயிர் சேத பாதிப்புகள்: மத்தியக்குழுவினர் இன்று ஆய்வு

Feb 04, 2021 8:03 AM

தமிழகத்தில் கனமழையால் ஏற்பட்ட பயிர் சேத பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினர் இன்று விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று ஆய்வு மேற்கொள்கின்றனர்.

மத்திய உள்துறை இணை செயலாளர் அஸ்சுதோஷ் அக்னி கோத்ரி தலைமையிலான மத்தியக்குழுவினர் நேற்று சென்னை வந்தனர். அக்குழுவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

அஸ்சுதோஷ் அக்னி கோத்ரி தலைமையிலான முதல் குழுவினர் இன்று காலை, விமானம் மூலம் மதுரை சென்று, அங்கிருந்து கார் மூலமாக விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

இதேபோல 2 -வது குழுவினர் விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து புதுக்கோட்டை,தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று ஆய்வு மேற்கொள்கின்றனர்.