பேத்தியை கர்ப்பமாக்கிய தாத்தா கைது... 34 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பு
Published : Feb 04, 2021 7:27 AM
பேத்தியை கர்ப்பமாக்கிய தாத்தா கைது... 34 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பு
Feb 04, 2021 7:27 AM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கிய முதியவருக்கு 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
ஒசூர் அடுத்த பேரண்டப்பள்ளியை சேர்ந்த ஆடு மேய்ப்பவரான கோவிந்தராஜ் தனது 15 வயது பேத்தியிடம் அத்துமீறி கர்ப்பமாக்கி உள்ளார்.
இதுதொடர்பான வழக்கில், சிறுமியை வன்கொடுமை செய்தது, தகாத முறையில் நடந்து கொண்டது, உள்ளிட்ட குற்றங்களுக்காக கோவிந்தராஜுக்கு 34 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.