ஜெய்ப்பூரில் நகைக்கடை, கட்டுமான நிறுவனங்களில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 1400 கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை கண்டுபிடிப்பு
Published : Jan 22, 2021 8:30 AM
ஜெய்ப்பூரில் நகைக்கடை, கட்டுமான நிறுவனங்களில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 1400 கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை கண்டுபிடிப்பு
Jan 22, 2021 8:30 AM
ஜெய்ப்பூரில் உள்ள நகைக்கடை மற்றும் இரண்டு ரியல்எஸ்டேட் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனைகளில் ஆயிரத்து 400 கோடி ரூபாய்க்கு கணக்கில் வராத பணப் பரிவர்த்தனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முன்னணி கட்டுமான நிறுவனத்தின் ஏழு ஆண்டு கணக்குகளை வருமானவரித்துறை அதிகாரிகள் தணிக்கை செய்தனர். கணக்குப்புத்தகங்கள் வரவு செலவு விவரங்கள் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்தது சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு 650 கோடி ரூபாய்க்கு கணக்கில் காட்டப்படாத பரிவர்த்தனை நடந்திருப்பது தெரிய வந்தது.
இரண்டாவது நகைக்கடை மற்றும் பல்பொருள் விற்பனை நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பினாமி சொத்துகள் 15 கோடி ரூபாய் சிக்கியுள்ளது. மற்றொரு கட்டுமான நிறுவனத்தில் 225 கோடி ரூபாய்க்கு கணக்கில் வராத பணப்பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.