சீனாவின் ஹபே மாகாணத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
Published : Jan 22, 2021 8:10 AM
சீனாவின் ஹபே மாகாணத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
Jan 22, 2021 8:10 AM
சீனாவின் ஹபே மாகாணத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஷிஜியாசுவாங் (Shijiazhuang) நகரில் 458 கொரோனா தடுப்பு மையங்கள் அமைக்கப்பட்டு நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுக்க ஹாட்லைன் வசதி செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர 4 ஆயிரம் அறைகளுடன் கூடிய சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டவுடன் அங்கும் நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட உள்ளனர்.
கொரோனா தனிமை முகாம்களில் குழந்தைகளுக்கும் முதியோருக்கும் அதிக அளவிலான அக்கறை செலுத்தப்படுவதாக துணை மேயர் (மெங் சீயாங் ஹாங்) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அரசின் நடவடிக்கையால் நோய்ப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.