லயோலா கல்லூரிக்கு அபராதம் விதித்த மாநில மகளிர் ஆணையத்தின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
Published : Jan 22, 2021 7:47 AM
லயோலா கல்லூரிக்கு அபராதம் விதித்த மாநில மகளிர் ஆணையத்தின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
Jan 22, 2021 7:47 AM
சென்னை லயோலா கல்லூரிக்கு 64 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த மாநில மகளிர் ஆணையத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லயோலா கல்லூரி அலுவலரும், மதபோதகருமான சேவியர் அல்போன்ஸ் மீது அதே கல்லூரியில் பணியாற்றிய பெண் ஒருவர் தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக விசாரித்த ஆணையம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 64 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், கல்லூரி நிர்வாகம் தொடர்ந்த வழக்கில், லயோலா கல்லூரிக்கு அபராதம் விதித்த மாநில மகளிர் ஆணையத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.