இன்று முதல் வர்த்தக ரீதியாக கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்கிறது இந்தியா..!
Published : Jan 22, 2021 7:10 AM
இன்று முதல் வர்த்தக ரீதியாக கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்கிறது இந்தியா..!
Jan 22, 2021 7:10 AM
மனிதநேயத்துடன் அண்டை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை அனுப்பி வைத்துள்ள இந்தியா இன்றுமுதல் வர்த்தக ரீதியாகவும் உலக நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்கிறது.
தென் ஆப்பிரிக்கா, சவூதி அரேபியா, வங்காள தேசம், மியான்மர் உள்ளிட்ட நாடுகளுக்கு கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் அனுப்பி வைக்கப்படுகிறது. முதன்முதலாக பிரேசிலும் மொரோக்கோவும் தலா இருபது லட்சம் டோஸ்கள் மருந்தை பெற உள்ளன.
இந்த மருந்தை சுமந்து இரண்டு விமானங்கள் இன்று அதிகாலை புறப்பட்டுச் செல்கின்றன.இதர நாடுகளுக்கு பத்து லட்சம் டோஸ்கள் ஜனவரி மாதத்தின் இறுதிக்குள் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே நேபாளம், பூட்டான், மாலத்தீவு உள்ளிட்ட ஏழு அண்டை நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசியை ஏற்றுமதி செய்துள்ளது.