மும்பை மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் போதைப்பொருள் தடுப்புத்துறை சோதனை; துப்பாக்கி, ரூ. 2.18 கோடி பணம் பறிமுதல்
Published : Jan 22, 2021 6:55 AM
மும்பை மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் போதைப்பொருள் தடுப்புத்துறை சோதனை; துப்பாக்கி, ரூ. 2.18 கோடி பணம் பறிமுதல்
Jan 22, 2021 6:55 AM
மும்பையில் தாவூத் இப்ராஹிமுடன் தொடர்புள்ளதாகக் கூறப்படும் மருந்து தொழிற்சாலையில், போதைப் பொருள் தடுப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் துப்பாக்கி மற்றும் 2 கோடியே 18 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.
டோங்ரி என்ற இடத்தில் உள்ள மருந்து தொழிற்சாலையில் போதை மருந்துகள் தயாரிக்கப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் போதைப் பொருள் தடுப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அங்கு 5 கிலோ மெபெட்ரோன், ஒரு கிலோ மெத்தாம்பேட்டமைன் மற்றும் 6 கிலோ எபிட்ரைன் என்ற போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றுடன் துப்பாக்கி மற்றும் 2 கோடியே 18 லட்சம் ரூபாயும் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.