​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அம்மாவ கம்பியால அடிச்சப்ப யாரும் ஹெல்புக்கு வரல..! நிற்கதியாக பதறும் பிஞ்சு

Published : Jan 22, 2021 6:50 AM



அம்மாவ கம்பியால அடிச்சப்ப யாரும் ஹெல்புக்கு வரல..! நிற்கதியாக பதறும் பிஞ்சு

Jan 22, 2021 6:50 AM

திருவள்ளூர் அருகே சிறுமியின் கண் முன்பே அவளது தாயை அடித்து கொலை செய்த, தாயின் 2 வது கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இரும்பு கம்பியால் தாய் தாக்கப்படுவது குறித்து வீடு வீடாக சென்று உதவி கேட்டும் ஒருவர் கூட உதவவில்லை என்று சிறுமி சாட்சியளித்த சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

எந்த ஒரு சிறுமிக்கும் நேரக்கூடாத கொடுமை, தாய் தன் கண் முன்னால் கொல்லப்படுவதை அறிந்து, பிறரிடம் உதவி கேட்டும் கிடைக்காமல் தாயை பறிகொடுத்துவிட்டு தவிக்கும் ஆதரவற்ற 7 வயது சிறுமியின் சாட்சியான வார்த்தைகள் இவை..!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த மேல்பாக்கம், பஜனை கோவில் தெருவில் வசித்தவர் சரிதா. இவரது முதல் கணவர் சுரேஷ். இவர்களுக்கு 7 வயதில் மகள் உள்ள நிலையில் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு மதன் என்ற மாட்டிறைச்சி வியாபாரியுடன் சரிதாவுக்கு காதல் ஏற்பட்டுள்ளது.

மதனுக்கு ஏற்கனவே அலமேலு என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் சரிதாவை 2வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்த 7மாத பெண் குழந்தை இருக்கும் நிலையில் , முதல் கணவருக்கு பிறந்த 7 வயது மகளையும் சரிதா தன்னுடன் வைத்திருந்தார்.

திருமணத்திற்கு முன்பு பல்லாவரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்த சரிதாவை, திருமணம் முடிந்த பிறகு வேலைக்கு செல்ல வேண்டாம் என மதன் கூறிவிட்டார். இந்த நிலையில் சமீபகாலமாக சரிதா, மீண்டும் வேலைக்கு செல்வேன் என மதனிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகின்றது.

இதற்கிடையே கடந்த சில தினங்களாக மதனுடன் அவரது முதல் மனைவி அலமேலுவின் மகள் சங்கீதா செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளார். இந்த தகவல் சரிதாவுக்கு தெரிந்து ஆத்திரம் அடைந்து சண்டையிட்டதாக கூறப்படுகின்றது. முதல் மனைவி, குழந்தைகளுடன் தொடர்பில்லை எனக் கூறி தன்னை திருமணம் செய்து ஏமாற்றியது ஏன் ? என கேட்டு தகராறு செய்துள்ளார்.

இந்நிலையில், வியாழக்கிழமை மதியம் மீண்டும் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. 7 வயது மகள் அருகில் இருந்த நிலையில் ஆத்திரமடைந்த மதன் வீட்டில் இருந்த இரும்பு பைப்பை எடுத்து சரிதாவின் தலையில் சரமாரியாக அடித்துள்ளார்.

இதில், சம்பவ இடத்திலேயே சரிதா ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். தனது கண்முன் தாயை அடித்துக்கொலை செய்யப்பட்டதை பார்த்த, அந்த 7 வயது சிறுமி அதிர்ச்சி அடைத்து கதறி அழுதார். இதன் பிறகு மதன், தனக்கு பிறந்த 7மாத குழந்தையுடன் அங்கிருந்து தப்பி ஓடினார்.

பின்னர் போலீசார் தலைமறைவாக இருந்த மதனை கொலைநடந்த 3 மணி நேரத்தில் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்த 7 மாத குழந்தையை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். மதன் செய்த கொலைக்கு சரிதாவின் 7 வயது மகள் சாட்சியாகி இருக்கிறாள்..!

முதல் மனைவி இருக்க புதிதாக பெண் தேடிச்செல்லும் மன்மதர்களுக்கும், கணவரை கைவிட்டு புதிய இணை தேடிச்செல்லும் பேரழகிகளுக்கும் என்ன மாதிரியான விபரீதம் அரங்கேறும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி..!