வீடு வீடாக ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கியது ஆந்திர அரசு..!
Published : Jan 22, 2021 6:44 AM
வீடு வீடாக ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கியது ஆந்திர அரசு..!
Jan 22, 2021 6:44 AM
வீடு வீடாகச் சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் நடமாடும் வாகனங்களை ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
9 ஆயிரத்துக்கும் அதிகமான சரக்கு வாகனங்கள் மூலமாக தரமான அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் விநியோகம் விஜயவாடாவில் தொடங்கியுள்ளது.
வயதானவர்களும் நோய்வாய்ப்பட்டவர்களும் நீண்ட வரிசையில் ரேஷன் கடைகளின் முன்பு நிற்பதை தமது பாத யாத்திரையின் போது கண்டதனால் இத்திட்டம் உருவானதாக ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.