​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியாவில் இதுவரை பத்துலட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டது- மத்திய அரசு

Published : Jan 22, 2021 6:33 AM

இந்தியாவில் இதுவரை பத்துலட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டது- மத்திய அரசு

Jan 22, 2021 6:33 AM

ந்தியாவில் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தைக் கடந்துவிட்டது.

27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. கோவின் என்ற அரசு உருவாக்கிய செயலி மூலமாக முன்பதிவு செய்தவர்களுக்குத் தடுப்பூசி போடப்படுகிறது.

தடுப்பூசியால் உயிரிழப்பு ஏதுமில்லை என்றும் சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் அக்னானி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது என்று அரசுத் தரப்பில் பிரச்சாரம் முடுக்கி விடப்பட்டுள்ளது.