தரையில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் ஸ்மார்ட் வெடிகுண்டு பரிசோதனை வெற்றி
Published : Jan 21, 2021 9:31 PM
தரையில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் ஸ்மார்ட் வெடிகுண்டு பரிசோதனை வெற்றி
Jan 21, 2021 9:31 PM
தரையில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் ஸ்மார்ட் வெடிகுண்டை, பொதுத்துறையை சேர்ந்த ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் நிறுவனம் விமானத்தில் இருந்து வெற்றிகரமாக இயக்கி சோதனை செய்துள்ளது.
ஒடிசா கடற்கரையில் நடத்தப்பட்ட சோதனையில், ஹாக் ஐ என்ற விமானத்தில் இருந்து, உள்நாட்டு தொழில்நுட்பத்தில் டிஆர்டிஒ தயாரித்த ஸ்மார்ட் அண்டி ஏர்பீல்ட் வெப்பன் என்றழைக்கப்படும் வெடிகுண்டு வெற்றிகரமாக வெடிக்க வைத்து சோதனை செய்யப்பட்டது.
சுமார் 120 கிலோ எடையுள்ள இந்த குண்டு மூலம், 100 கிலோ மீட்டர் வரை உள்ள இலக்குகளை தாக்கி விமானிக்கு பாதிப்பு ஏற்படாமல் வீசி அழிக்க முடியும்.
குறிப்பாக எதிரி நாடுகளின் விமானப்படை தளங்கள், பதுங்கு குழிகள் உள்ளிட்டவற்றை நாசம் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.