கோவிஷில்டு கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் தீ விபத்து - 5 பேர் உயிரிழப்பு
Published : Jan 21, 2021 9:27 PM
கோவிஷில்டு கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் தீ விபத்து - 5 பேர் உயிரிழப்பு
Jan 21, 2021 9:27 PM
கோவிஷில்டு கொரோனா தடுப்பூசி தயாரித்து வரும் சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
புதிதாக கட்டப்பட்ட வரும் கட்டிடத்தில் 4வது மற்றும் 5வது தளத்தில் தீ பற்றியதை அடுத்து, உடனடியாக 10 வாகனங்களில் தீ அணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சில மணி நேரத்தில் தீ அணைக்கப்பட்ட நிலையில், அதே கட்டடித்தில் மீண்டும் தீ பிடித்ததால் அதனை அணைக்கும் பணியும் முடுக்கி விடப்பட்டது.
தீ விபத்தில் பலியான 5 பேரின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.
தீ விபத்தில் உயரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.