தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக,596 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 705 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
9 பேர் கொரோனாவுக்கு பலியாக, மாநிலம் முழுவதும் 31 மாவட்டங்களில் ஒரு உயிரிழப்பு கூட நிகழவில்லை. சென்னையில் புதிதாக 166 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
21 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் பதிவாகியுள்ளதாக கூறியுள்ள தமிழக சுகாதாரத்துறை, பெரம்பலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகியவை கொரோனா இல்லாத மாவட்டங்களாக மாறி உள்ளதாக தெரிவித்துள்ளது.