கேரள சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானம் தோல்வி
Published : Jan 21, 2021 7:25 PM
கேரள சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானம் தோல்வி
Jan 21, 2021 7:25 PM
கேரள மாநிலத்தில் சபாநாயகரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.
தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுடன், சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் சபாநாயகரை பதவி நீக்கம் செய்யக்கோரி, எதிர்க்கட்சிகள் கொண்ட ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.பாஜக எம்எல்ஏ ராஜகோபால் உள்ளிட்ட 20 உறுப்பினர்கள் தீர்மானத்தை ஆதரித்தனர்.
சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் என்பதால், விவாதத்தின்போது துணை சபாநாயகர் அவையை வழிநடத்தினார். விவாதங்களுக்கு பின்னர் குரல் வாக்கெடுப்பில் தீர்மானம் தோல்வி அடைந்ததாக கூறி,அதனை நிராகரிப்பதாக துணை சபாநாயகர் அறிவித்தார்.