​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு விசாரணை : 4 நாட்களில் ஆளுநர் முடிவெடுப்பார் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

Published : Jan 21, 2021 7:17 PM

பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு விசாரணை : 4 நாட்களில் ஆளுநர் முடிவெடுப்பார் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

Jan 21, 2021 7:17 PM

பேரறிவாளன் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் மீது ஆளுநர் 4 நாட்களுக்குள் முடிவெடுப்பார் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க வலியுறுத்தி 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

2 ஆண்டுகளாக ஆளுநர் எந்த முடிவும் எடுக்காத நிலையில், உச்சநீதிமன்றத்தில் தன்னை விடுவிக்க கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான துஷர்மேத்தா, அமைச்சவை தீர்மானம் மீது 3 அல்லது 4 நாட்களில் ஆளுநர் முடிவெடுப்பார் என தெரிவித்தார்.