தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த இரு நாட்களுக்கு தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடுமென கூறப்பட்டுள்ளது.
23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவுமென குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை நகரில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் இருக்கும் என்றும்