சசிகலாவுக்கு ஐசியுவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும் நிலையில், அவரது நுரையீரலில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பெங்களூரு போரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலாவை, சிடி ஸ்கேன் எடுப்பதற்காக பிற்பகலில் விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அவருக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைராய்டு பாதிப்பு இருப்பதால், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாக விக்டோரியா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிடி ஸ்கேனில் அவருக்கு நுரையீரல் தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
சசிகலா உடல்நிலையை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.