​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மும்பை மாநகராட்சியின் நோட்டீஸை எதிர்த்து நடிகர் சோனு சூட் தொடர்ந்த மனு தள்ளுபடி - மும்பை உயர்நீதிமன்றம்

Published : Jan 21, 2021 5:18 PM

மும்பை மாநகராட்சியின் நோட்டீஸை எதிர்த்து நடிகர் சோனு சூட் தொடர்ந்த மனு தள்ளுபடி - மும்பை உயர்நீதிமன்றம்

Jan 21, 2021 5:18 PM

மும்பை மாநகராட்சியின் நோட்டீஸை எதிர்த்து பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் தொடர்ந்த மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நடிகர் சோனு சூட் மும்பை ஜூகுவில் உள்ள அவருக்கு சொந்தமான கட்டிடத்தில் சட்டவிரோதமாக கட்டுமான பணிகளை மேற்கொண்டதாக மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீசை எதிர்த்து சோனு சூட் தாக்கல் செய்திருந்த மனு, மும்பை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி பிரித்விராஜ் சவான், மனசாட்சிப்படி வேலை செய்பவர்களுக்கு மட்டுமே சட்டம் உதவி செய்யும் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.