​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Published : Jan 21, 2021 4:20 PM

இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Jan 21, 2021 4:20 PM

இலங்கை கடற்படையின் தாக்குதலில் உயிரிழந்த 4 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ள முதலமைச்சர், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் இலங்கை கடற்படையின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோட்டைப்பட்டினம் துறைமுகத்திலிருந்து சென்ற மெசியா, நாகராஜ், செந்தில்குமார், சாம்சன் டார்வின் ஆகிய 4 மீனவர்களும் இலங்கை கடற்படையின் தாக்குதலினால் இறந்துவிட்டதாக தகவல் வரப்பெற்றுள்ளது என்றும், அவர்களது குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி, விசைப்படகிற்கு  நிவாரணம்  வழங்கப்படும் என்றும், இதுபோன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசை தொடர்பு கொண்டு,  நடவடிக்கை எடுத்து வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.