​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் கல்லூரி மாணவர்களைக் கத்தி முனையில் மிரட்டி வழிப்பறி செய்த கும்பல்

Published : Jan 21, 2021 4:18 PM

சென்னையில் கல்லூரி மாணவர்களைக் கத்தி முனையில் மிரட்டி வழிப்பறி செய்த கும்பல்

Jan 21, 2021 4:18 PM

சென்னையில் கல்லூரி மாணவர்களை இரவில் கத்தி முனையில் சிறைப்பிடித்த வழிப்பறிக் கும்பல் அவர்களின் ஏடிஎம் அட்டையைப் பறித்துப் பணத்தை எடுத்துச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேட்டரிங் மாணவர்கள் மூன்று பேர் நேற்றிரவு 10 மணியளவில் விடுதிக்கு வரும்போது கோடம்பாக்கம் மேம்பலம் அருகே கத்தியைக் காட்டி மடக்கிய 6 பேர் கொண்ட கும்பல், அருகில் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே கொண்டு சென்றனர்.

அவர்களின் செல்போன்களைப் பறித்துக் கொண்டதுடன், கத்தியின் பின் பகுதியால் அடித்துப் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

பணம் இல்லாததால் ஏடிஎம் அட்டையைப் பறித்து ரகசிய எண்ணையும் வாங்கிக் கொண்டு 22 ஆயிரம் ரூபாயை ஏடிஎம்மில் இருந்து எடுத்துள்ளனர்.

போதையில் இருந்த கொள்ளையர்கள் அதிகாலை 4 மணியளவில் அவர்களை விடுவித்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.