​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீன ஆன்லைன் கந்து வட்டி ஆப் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

Published : Jan 21, 2021 3:42 PM

சீன ஆன்லைன் கந்து வட்டி ஆப் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

Jan 21, 2021 3:42 PM

ஆன்லைன் கந்துவட்டி கடன் செயலி வழக்கில், இண்டர்போல் உதவியை நாட உள்ளதால் தமிழக சிபிசிஐடி புலனாய்வு பிரிவுக்கு வழக்கை மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆன்லைனில் வட்டிக்கு கடன் வழங்கி, அசல் தொகையை விட பல மடங்கு மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்த இரண்டு சீனர்கள் உட்பட 8 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அண்மையில் கைது செய்தனர்.

இந்த வழக்கில் மூளையாக செயல்பட்ட முக்கிய நபரான ஹாங்க், சீனா தப்பிச் சென்றது தெரியவந்தது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய கும்பல் சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பதுங்கியிருப்பதால் அவர்களை பிடிக்க இன்டர்போல் உதவியை நாட வேண்டியுள்ளதால் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த வழக்கில் கைதான 2 சீனர்கள் உள்பட 4 பேரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து தாம்பரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.