20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக வங்கதேசத்திற்கு வழங்கியது இந்தியா
Published : Jan 21, 2021 1:34 PM
20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக வங்கதேசத்திற்கு வழங்கியது இந்தியா
Jan 21, 2021 1:34 PM
வங்கதேசத்திற்கு 20 லட்சம் கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தியா இலவசமாக அனுப்பி வைத்தது.
கடந்த மாதம் 3 கோடி கொரோனா தடுப்பூசிகளை பெறும் பொருட்டு வங்கதே அரசு, சீரம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருந்த நிலையில் 20 லட்சம் டோஸ்களை இலவசமாக வழங்குவதாக இந்தியா அறிவித்தது.
இந்நிலையில், இன்று மும்பை விமான நிலையத்தில் இருந்து 20 லட்சம் கொரோனா தடுப்பு மருந்துகள் பாதுகாப்பாக வங்கதேசம் டாக்கா விமான நிலையம் சென்றடைந்தது.
இதனை குறிப்பிட்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வங்கதேசத்துடனான உறவுக்கு இந்தியா எப்போதும் முன்னுரிமை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.