​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அவசர கோலத்தில் மூன்று மாதங்களில் விடப்பட்டுள்ள டெண்டர்கள் அனைத்தும் திமுக ஆட்சி அமைந்தவுடன் ரத்து செய்யப்படும் - மு.க.ஸ்டாலின்

Published : Jan 21, 2021 12:08 PM

அவசர கோலத்தில் மூன்று மாதங்களில் விடப்பட்டுள்ள டெண்டர்கள் அனைத்தும் திமுக ஆட்சி அமைந்தவுடன் ரத்து செய்யப்படும் - மு.க.ஸ்டாலின்

Jan 21, 2021 12:08 PM

பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறையில் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மூன்றே மாதங்களில் 2855 கோடி ரூபாய்க்கு மேல் டெண்டர்கள் விடப்பட்டிருப்பதாகக் கூறியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சி அமைந்தவுடன் இந்த டெண்டர்கள் ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு துறையிலும் கடைசி நேரத்தில் விடப்பட்ட அனைத்து டெண்டர்கள் குறித்தும் முறைப்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அவசர கோலத்தில் கமிஷனுக்காக விடப்பட்டுள்ள அந்த டெண்டர்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

திமுக ஆட்சி அமைந்தவுடன் பழைய டெண்டர் முறைகேடுகள் குறித்தும் தயவு தாட்சண்யமின்றி விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தோர் யாராயினும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.