பாரீஸ் உடன்படிக்கையில் மீண்டும் இணைவதற்கான கோப்பில் கையொப்பமிட்டார் அதிபர் ஜோ பைடன்
Published : Jan 21, 2021 11:08 AM
பாரீஸ் உடன்படிக்கையில் மீண்டும் இணைவதற்கான கோப்பில் கையொப்பமிட்டார் அதிபர் ஜோ பைடன்
Jan 21, 2021 11:08 AM
பருவநிலை மாற்றம் குறித்த பாரீஸ் உடன்படிக்கையில் அமெரிக்கா மீண்டும் இணைவதற்கான கோப்பில், புதிய அதிபராகப் பதவியேற்ற முதல் நாளிலேயே ஜோ பைடன் கையொப்பமிட்டுள்ளார்.
அமெரிக்காவின் 46ஆவது அதிபராகப் பதவியேற்றுள்ள ஜோ பைடன், முதல் நாளிலேயே தனது அலுவலகத்தில் கோப்புகளைப் பார்வையிட்டார்.
கொரோனா கட்டுப்பாடு, மெக்சிகோ எல்லையில் மதில்சுவர் கட்டும் திட்டத்தைக் கைவிடுவது, முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தோர் அமெரிக்காவுக்கு வருவதற்கான தடையை நீக்குவது உள்ளிட்ட 15 கோப்புகளில் அவர் கையொப்பமிட்டார்.