எவரெஸ்ட்டில் கொட்டப்படும் குப்பைகளை கலைப்பொருட்களாக உருவாக்க ஏற்பாடு
Published : Jan 21, 2021 10:38 AM
உலகின் உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டில் கொட்டப்படும் குப்பைகளை வைத்து ஒரு கலைக்கூடம் அமைக்க அங்குள்ள மாசுக்கட்டுப்பாட்டுக் குழு ஏற்பாடு செய்து வருகிறது.
எவரெஸ்ட்டின் உச்சியில் கால்பதிக்க ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் முயற்சி செய்யும் நிலையில், மலையேறுபவர்கள் ஆக்சிஜன் சிலிண்டர், பேட்டரிகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், போன்ற பொருட்களை பயன்படுத்திவிட்டு, அங்கேயே விட்டு விடுகின்றனர்.
இதனால் ஏற்படும் மாசினை தடுக்கவும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அங்குள்ள குப்பைகளை சேகரித்து கலைக்கூடம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.