அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் நாளை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் பிசாகி தெரிவித்துள்ளார்.
ஜோ பைடன் தொடர்பு கொள்ள உள்ள முதல் வெளிநாட்டுத் தலைவர் கனடா பிரதமர்தான் என்றும் இருதரப்பு உறவுகள் குறித்து இருவரும் ஆலோசிக்க உள்ளதாகவும் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
ஈரான் அணு ஆயுதக் குவிப்பு குறித்தும் ஜோ பைடன் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.