நாடாளுமன்றக் கூட்டத்தொடர் 29ந் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்கு அடுத்த நாள் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
அதேநாளில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனை கூட்டமும் நடைபெறவுள்ளது. அ.தி.மு.க., ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகளுக்கும் இக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இந்த இரு கூட்டங்களும் காணொலி வாயிலாக நடைபெற உள்ளன.