​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் சுங்கத்துறை அதிகாரிகள் மாநில அரசு அதிகாரிகளை மிரட்டி வருவதாக பினராயி விஜயன் குற்றச்சாட்டு

Published : Jan 21, 2021 7:13 AM

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் சுங்கத்துறை அதிகாரிகள் மாநில அரசு அதிகாரிகளை மிரட்டி வருவதாக பினராயி விஜயன் குற்றச்சாட்டு

Jan 21, 2021 7:13 AM

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் சுங்கத்துறை அதிகாரிகள் மாநில அரசு அதிகாரிகளை மிரட்டி வருவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

விசாரணைக்கு அழைக்கப்படும் அரசு அதிகாரிகளை சுங்கத்துறை அதிகாரிகள் மிரட்டியதாக தெரிவித்த பினராயி விஜயன் ஹரிகிருஷ்ணன் என்ற அதிகாரி விசாரணைக்கு அழைக்கப்பட்டு மிரட்டப்பட்டதாக தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்துள்ளதை சுட்டிக் காட்டினார்.

சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ. ஜாய் அளித்துள்ள கேள்விக்கு பதிலளிக்கையில் இதனைத் தெரிவித்த பினராயி விஜயன், இந்த மிரட்டல் விவகாரம் தொடர்பாக மத்திய நிதித்துறைச் செயலாளர் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியிருப்பதாக குறிப்பிட்டார்.