15 முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
Published : Jan 21, 2021 6:36 AM
மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைத்து அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று பதவியேற்ற அவர் முதல் நாளில் 15 முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். முதலாவதாக மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச்சுவர் கட்ட ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைத்து அவர் உத்தரவிட்டார்.
இந்தச் சுவர் திட்டம்தான், 2016ம் ஆண்டு டிரம்ப் வெற்றிக்கு முக்கியக் காரணமாகக் கருதப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கர்கள் அனைவரும் பொதுவெளியில் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கும் மசோதாவில் பைடன் கையெழுத்திட்டுள்ளார்.
அடுத்ததாக குறிப்பிட்ட சில இஸ்லாமிய நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியும் பைடன் கையெழுத்திட்டுள்ளார். மேலும் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவதற்கான செயல்முறையைத் தொடங்கும் திட்டங்களுக்காகவும் பைடன் கையெழுத்திட்டார்.