​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசியல் சாசனத்தின்படி ஆதார் அட்டை செல்லத்தக்கது -உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

Published : Jan 21, 2021 5:36 AM

அரசியல் சாசனத்தின்படி ஆதார் அட்டை செல்லத்தக்கது -உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

Jan 21, 2021 5:36 AM

அரசியல் சாசனத்தின்படி ஆதார் அட்டை செல்லத்தக்கது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இது தொடர்பான மறுஆய்வு மனுக்களை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டுள்ளது.

2018ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி வழங்கிய தீர்ப்பில் அரசு திட்டங்களின் சலுகைகளுக்கு கண்டிப்பாக ஆதார் கட்டாயம் எனவும், அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் எனவும் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

இந்த உத்தரவிற்கு எதிராகவும், தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரியும் தாக்கல் செய்யப்பட்ட 27 வழக்குகளை அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.

நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முந்தைய உத்தரவில் எந்தவித மறுஆய்வும் செய்ய வேண்டிய அவசியமில்லை எனக் கூறி மனுக்களை தள்ளுபடி செய்தனர்.