மகாராஷ்டிராவில் பறவைக் காய்ச்சல் எதிரொலியாக 1,500 கோழிகள் அழித்தொழிப்பு
Published : Jan 21, 2021 4:24 AM
மகாராஷ்டிராவில் பறவைக் காய்ச்சல் எதிரொலியாக 1,500 கோழிகள் அழித்தொழிப்பு
Jan 21, 2021 4:24 AM
மகாராஷ்டிராவில் பறவைக் காய்ச்சல் எதிரொலியாக ஆயிரத்து 500 கோழிகள் கொல்லப்பட்டன.
தானே மாவட்டத்தில் உள்ள ரைட்டா மற்றும் அடாலி என்ற இடங்களில் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு கிராமங்களிலும் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த ஆயிரத்து 500 கோழிகள் கொல்லப்பட்டன.
குறிப்பிட்ட இடங்களில் முகாமிட்டுள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள், வேறு பறவைகளுக்கு நோயின் அறிகுறிகள் உள்ளனவா என ஆய்வு நடத்தி வருகின்றனர்.