நாடு முழுவதும் 5 நாட்களில் 7 லட்சத்து 86 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி.. மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்
Published : Jan 20, 2021 10:42 PM
நாடு முழுவதும் 5 நாட்களில் 7 லட்சத்து 86 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி.. மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்
Jan 20, 2021 10:42 PM
நாடு முழுவதும் 5 நாட்களில் 7 லட்சத்து 86 ஆயிரத்து 842 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் மனோகர் அக்னானி, கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்களில் யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்றார். உயிரிழந்த 4 நபர்களில் 3 பேரின் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்ல என்பது உறுதியாகி உள்ளது என்றும், மற்றொரு நபரின் பிரதே பரிசோதனை வரவேண்டியுள்ளது என்றும் தெரிவித்தார்.