வானிலை நிலவரங்களை பொதுமக்கள் பதிவு செய்யும் புதிய வசதி அறிமுகம்
Published : Jan 20, 2021 8:42 PM
மக்கள் தங்களின் இருப்பிடத்தில் நிலவும் வானிலை நிகழ்வுகள், மாற்றங்கள் மற்றும் இயற்கை பேரிடர்கள் குறித்து பதிவு செய்ய இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய வசதியினை ஏற்படுத்தியுள்ளது.
இதற்காக city.imd.gov in என்ற இணையதளத்தில் PUBLIC OBSERVATION என்னும் புதிய பகுதி உருவாக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் மக்கள் தங்கள் பகுதியில் நிகழும், இடி,மின்னல், சூறாவளி காற்று, புயல், கடல் சீற்றம் .
வானிலையால் ஏற்படும் பாதிப்புகள், பனிக்கட்டி மழை மற்றும் கடலில் ஏற்படும் பேரலைகள் உள்ளிட்டவைகளை பதிவு செய்ய முடியும். தனியார் வானிலை ஆர்வலர்கள் தங்களால் முடிந்த தரவுகளை பகிர்ந்து கொள்ளவும் முடியும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.