தமிழ்நாட்டில், கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வரும் சூழலில், வைரஸ் தொற்று இல்லாத மாவட்டங்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக,549 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 713 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சென்னையில் 90 வயது மூதாட்டி உள்பட 9 பேர் கொரோனாவுக்கு பலியாக, மாநிலம் முழுவதும் 32 மாவட்டங்களில் ஒரு உயிரிழப்பு கூட நிகழவில்லை. சென்னையில் புதிதாக 150 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
18 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் பதிவாகியுள்ளதாக கூறியுள்ள தமிழக சுகாதாரத்துறை, கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் ராமநாதபுரம் ஆகியவை கொரோனா இல்லாத மாவட்டங்களாக மாறி உள்ளதாக தெரிவித்துள்ளது.