​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமைச்சர் காமராஜின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தகவல்

Published : Jan 20, 2021 6:50 PM

அமைச்சர் காமராஜின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தகவல்

Jan 20, 2021 6:50 PM

தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜின் உடல் நிலை சீராக உள்ளதாக சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில், நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப் பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் காமராஜின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.