தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த இருநாட்களுக்கு மழை பெய்யக்கூடுமென கூறப்பட்டுள்ளது.
தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 22 ஆம் தேதி முதல் இரு நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை நகரில் அடுத்த இருநாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,காலை நேரத்தில் லேசான பனி மூட்டம் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.