மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்து முடிந்ததாக மகள்கள் ஸ்ருதிஹாசனும், அக்சராஹாசனும் தெரிவித்துள்ளனர்.
காலில் அறுவை சிகிச்சை செய்வதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாகவும், இன்னும் நான்கு ஐந்து நாட்களில் அவர் வீடு திரும்பி சில நாட்கள் ஓய்வுக்கு பின்னர், மீண்டும் மக்களை சந்திப்பார் என்றும் மகள்கள் இருவரும் கூறியுள்ளனர்.
அனைவரது அன்பிற்கும், பிரார்த்தனைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஸ்ருதியும், அக்சராவும் தெரிவித்துள்ளனர்.