தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் ஆர்வத்தை கற்றல் நோக்கி திருப்புவதற்காக சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
அதன்படி, அனைத்து பள்ளிகளிலும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்றும், நாளையும் மனவளப் பயிற்சிகள், ஆலோசனைகள் போன்றவை சிறப்பு வகுப்புகளாக நடத்தப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக சென்னை எம்ஜிஆர் நகர் அரசு பள்ளியில் நடைபெற்ற பயிற்சியை பார்வையிட்ட தொடக்கக்கல்வி இயக்குனர் பழனிசாமி, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து மாணவர்களிடம் விளக்கி பேசினார்.