103 கிலோ தங்கம் திருடு போன வழக்கில் சிபிஐ ஆய்வாளர் மாணிக்கவேல் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர்
Published : Jan 19, 2021 1:29 PM
103 கிலோ தங்கம் திருடு போன வழக்கில் சிபிஐ ஆய்வாளர் மாணிக்கவேல் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர்
Jan 19, 2021 1:29 PM
சென்னையில் சிபிஐ கட்டுப்பாட்டில் இருந்த 103 கிலோ தங்கம் திருடு போன வழக்கில் சிபிஐ ஆய்வாளர் மாணிக்கவேல் சிபிசிஐடி அதிகாரிகளின் விசாரணைக்கு ஆஜராகினார்.
முதற்கட்ட விசாரணையில் தங்கம் வைக்கப்பட்டிருந்த லாக்கரில் கள்ளசாவி போட்டு கைவரிசை காட்டியது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இந்த விவகாரம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது.
சுராணா நிறுவனம் கடனை திரும்பி செலுத்ததால், தங்கத்தை எஸ்.பி.ஐ. வங்கியிடம் ஒப்படைக்கும் பணியை தற்போதைய சிபிஐ ஆய்வாளர் மாணிக்கவேல் மேற்கொண்டுள்ளார்.
அப்போது தான் தாங்கம் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. அவருடன் எஸ்.பி.ஐ. வங்கி மேலாளர்கள் இரண்டு பேரும் உடனிருந்துள்ளனர். அதன் அடிப்படையில் மூவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.