'செல்போனிலேயே போலி சான்றிதழ் தயாரித்தேன்!' - நீட் மோசடியில் பிடிபட்ட மாணவி வாக்குமூலம்
Published : Jan 19, 2021 12:38 PM
'செல்போனிலேயே போலி சான்றிதழ் தயாரித்தேன்!' - நீட் மோசடியில் பிடிபட்ட மாணவி வாக்குமூலம்
Jan 19, 2021 12:38 PM
செல்போனிலேயே போலி சான்றிதழ் தயாரித்ததாக நீட் தேர்வில் மோசடி செய்ய முயன்ற மாணவி தீக்ஷிதா வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த பல் மருத்துவர் பாலச்சந்திரனின் மகள் தீக்ஷிதா. இவர், சென்னையில் நடந்த மருத்து கவுன்சிலிங் தேர்வில் கலந்து கொண்டார். கவுன்சிலிங்கில் போலியாக தயாரிக்கப்பட்ட நீட் மதிப்பெண் சான்றிதழை கொடுத்து மருத்துவக் கல்லூரியில் சேர தீக்ஷிதா முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, தீக்ஷிதா அவரின் தந்தை மீது சென்னை பெரியமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மோசடி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் மாணவி தீக்ஷிதா அவரின் தந்தை பாலச்சந்திரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இரண்டு பேரையும் விசாரணைக்கு வர கூறி 3 முறை சம்மன் அனுப்பியும் வரவில்லை.
மாணவியுடன் தந்தை தலைமறைவாகி விட்டார். இதற்கிடையே, பெங்களுருவில் பதுங்கியிருந்த பாலச்சந்திரனை ஜனவரி 1 ஆம் தேதி தமிழ்நாடு போலீஸார் கைது செய்தனர். பாலச்சந்திரனிடத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், புரோக்கரான ஜெயக்குமார் என்பவர் போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்க உதவியது தெரிய வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய மாணவி தீக்ஷிதா தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். மாணவியை தேடி வந்த நிலையில், தீக்ஷிதாவை பெங்களுருவில் போலீஸார் கைது செய்தனர். சென்னை கொண்டு வந்து அவரிடத்தில் நடத்ததப்பட்ட விசாரணையில், செல்போனிலேயே போலி சான்றிதழை தயாரித்தாகவும் தந்தை உதவியாக இருந்தாகவும் தீக்ஷிதா வாக்குமூலம் அளித்துள்ளார்.