நூல் தட்டுப்பாடு, விலை உயர்வு ஆகிய காரணிகளால் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் விசைத்தறி உற்பத்தி குறைந்துவிட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பாதரையில் திமுக சார்பில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, பேசிய அவர், நூல் விலை உயர்வு, நூல் தட்டுப்பாடு உள்ளிட்ட விசைத்தறி தொழிலாளர்களின் பிரச்சனையை தீர்க்க அரசு மறந்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கரும்பு ஆலைகளுக்கு வழங்கப்படவேண்டிய நிலுவைத் தொகையினை உடனடியாக கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும், கரும்பு டன் ஒன்றுக்கு 4500 ரூபாய் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் ஸ்டாலின் உறுதியளித்தார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்ச்செல்வி என்ற பெண், நன்றாக படித்தும் நீட் தேர்வால் உருவான மன உளைச்சலால் தனது மகன் மோதிலால் தற்கொலை தற்கொலை செய்து கொண்டதாகவும், திமுக ஆட்சிக்கு வந்துடன் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்றும் கண்ணீர் மல்க ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தார்.