தமிழகத்தை ஒட்டிய கேரளா, ஆந்திர, தெற்கு உள் கர்நாடகா பகுதிககளிலிருந்து வடகிழக்கு பருவமழை விலகியதால் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தென் தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10ஆண்டுகளில் இந்த ஜனவரி மாதம் தான் அதிக மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.