திருப்பதியில் சுவாமி கும்பிடுவதற்கு சென்றால் உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று ஆந்திர மாநில சட்டமன்ற உரிமை குழு நடிகை ரோஜா கண்கலங்கிய படி புகார் தெரிவித்தார்.
அதிகாரிகள் தன்னை புறக்கணிப்பது பற்றியும், தான் வகிக்கும் பதவிக்கும் உரிய மரியாதை கிடைக்கவில்லை என்றும் அக்குழுவிடம் தெரிவித்தார். இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர சட்டமன்ற உரிமை குழு தலைவர் கோவர்தன் ரெட்டி, ரோஜாவின் முறையீடுகள் பற்றி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.