​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடுவானில் இருந்து விமானம் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது நாசாவின் செயற்கைக் கோள்கள்

Published : Jan 19, 2021 8:12 AM

நடுவானில் இருந்து விமானம் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது நாசாவின் செயற்கைக் கோள்கள்

Jan 19, 2021 8:12 AM

விர்ஜின் நிறுவனத்தின் மாற்றியமைக்கப்பட்ட விமானம் மூலம் நாசாவின் செயற்கைக் கோள்கள் நடுவானில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டன.

கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட விர்ஜின் நிறுவனம் நடுவானில் இருந்து செயற்கைக் கோளை ஏவும்முறையைக் கண்டுபிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து போயிங் விமானமொன்று மாற்றியமைக்கப்பட்டு ராக்கெட் செலுத்தூர்தியாக்கப்பட்டது. இந்த ஊர்தியில் இருந்து நாசாவின் லாஞ்சர் ஒன் என்ற 70 அடி நீள ராக்கெட் நடுவானில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது.

இறுதியில் லாஞ்சர் ஒன்னில் சுற்றுவட்டப் பாதையை அடைந்து விட்டதாக நாசா அறிவித்துள்ளது. மேலும் அதனுள் வைக்கப்பட்டிருந்த 10 சிறிய செயற்கைக் கோள்களும் அதனதன் புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.