​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விஜய் மல்லயாவை விரைவில் இந்தியா அழைத்து வர நடவடிக்கை... உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசுத் தரப்பில் உறுதி

Published : Jan 19, 2021 7:50 AM

விஜய் மல்லயாவை விரைவில் இந்தியா அழைத்து வர நடவடிக்கை... உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசுத் தரப்பில் உறுதி

Jan 19, 2021 7:50 AM

லண்டனில் இருந்து விஜய் மல்லயா விரைவில் இந்தியா அழைத்துவரப்படுவார் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

9000 கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, தொழிலதிபர் விஜய் மல்லையாவை, பிரிட்டனில் இருந்து நாடு கடத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள சில சட்டப் பிரச்னைகளால் தாமதமாவதாகவும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது. பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற அவரை, நாடு கடத்தி வருவதற்கான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.