கோவிட் பாதிப்புகள் காரணமாக எண்ணெய் உற்பத்தி குறைந்திருப்பதால் பெட்ரோல் டீசல் போன்ற பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்குக் காலங்களில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், உற்பத்தியில் இருந்த சமனற்ற நிலையே சந்தையில் விலையேற்றத்துக்கு காரணம் என்றார்.
சில மாதங்களுக்கு முன்பு வரை கச்சா எண்ணெய் பேரலுக்கு 35 முதல் 38 டாலர் வரை இருந்தது என்றும் தற்போது அது 55 டாலர் வரை உயர்ந்திருப்பதாகவும் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.