ஒடிசாவில் இருசக்கர வாகனத்தின் என்ஜினுக்குள் புகுந்த நல்லபாம்பு
Published : Jan 19, 2021 7:29 AM
ஒடிசா மாநிலத்தில் இருசக்கர வாகனத்தின் என்ஜின் பகுதிக்குள் புகுந்த நல்ல பாம்பு லாவகமாகப் பிடிக்கப்பட்டது.
புவனேஸ்வர் பகுதியைச் சேர்ந்த பிமல் குமார் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை எடுக்க முயன்ற போது அதனுள் பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார். இதையடுத்து பாம்புகள் ஆர்வலர்களுக்கு தகவல் அளித்தார்.
அங்கு வந்த அவர்கள் சுமார் அரை மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் பாம்பை வெளியே எடுத்தனர். அப்போதுதான் அது 4 அடி நீளமுள்ள நல்லபாம்பு என்பது தெரியவந்தது.